தயார் நிலையில் இருக்கும் கீழக்கரை அரசு மருத்துவமனை சிறப்பு கொரோனோ சிகிச்சை படுக்கை வசதிகள்..எதிர்பாராத மருத்துவர்களின் மருத்துவ விடுப்பு… சட்டமன்ற உறுப்பினரின் உடனடி கவனத்தினால் அவசர கால மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பு..

கீழக்கரை அரசு மருத்துவமனையை சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் காதர் பாட்சா இன்று (15/05/2021) ஆய்வு செய்தார். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று, வரும் நோயாளிகளுக்கு பிராணவாயு ஆக்சிஜன் உள்ளதா என்று மருத்துவரிடம் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கேட்டறிந்தார்.

பின்பு கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பூபதி இடம் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்றும் நகர்புறத்தில் எவ்வாறு கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகிறது என்றும் சட்டமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார். பின்பு தீயணைப்பு துறை வாகனம் மூலம் கீழக்கரை நகர் பகுதியில் உள்ள சாலைகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கவும். ஊருக்குள் சிறிய வாகனத்தை கொண்டு தினமும் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் மாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அகமது இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மற்றும் கீழக்கரை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இந்நிலையில் சில ஊடகங்களில் உண்மை நிலவரம் என்பதை ஆராயாமல் ஆளும் கட்சி மீது பழி சுமத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கீழக்கரை மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சை படுக்கை வசதிகள் உபயோகத்தில் இல்லை என்ற செய்தியை, படுக்கை வசதி இருந்தாலும் அதற்கு பணி செய்ய தகுதியான மருத்துவர்கள் வசதி அவசியம் என்ற அடிப்படை கூட அறியாமல் வெளியிட்டு இருந்தனர்.  இது சம்பந்தமாக கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறுகையில், “மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது, ஆனால் எதிர்பாராத விதமாக மருத்துவம் ஒருவர் விடுப்பிலும், சில பணியாளர்கள் உடல் குறைவாகவும் இருந்த காரணத்தினால் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டது, இன்னும் சில தினங்களில் முழுமையாக அனைத்து பணிகளும் தொடங்கும்” என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!