இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்னக்கடை தெருவைச் சேர்ந்த முதியவர் சென்னையில் மரணமடைந்து கீழக்கரையில் அடக்கம் செய்யப்பட்ட பின்பு அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சின்னக்கடை தெரு பகுதியில் சுகாதார துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
பின்பு அவருடைய மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்கள். அவர்கள் குணமடைந்து தன் வீட்டுக்கு நேற்று (27/04/2020) திரும்பி வந்துள்ளார்கள்.
இந்நிலையில் இன்று 28.04.2020 கீழக்கரையில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் DIG ரூபீஸ் குமார் மீனா, மற்றும் கீழக்கரை துணை கண்காணிப்பாளர் DSP முருகேசன் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஆய்வாளர் தங்க கிருஷ்ணன் சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் சிறப்பு பிரிவு தலைமை காவலர் முத்துச்செல்வம், கீழக்கரை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
சில தினங்களுக்கு முன்பு தென் மண்டல காவல்துறைத் தலைவர் IG சண்முக ராஜேஸ்வரன், இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் DIG ரூபீஸ் குமார் மீனா, இராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் SP வருண்குமார் ஆய்வு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழை நியூஸ் SKV சுஐபு









You must be logged in to post a comment.