தற்போது தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களின் வாக்காளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பெயர் சரிபார்த்தல், வாக்காளர் ஜாபிதாவில் பெயர் உள்ளதா? என உறுதி செய்து, முகவரி மாற்றம், புதிய வாக்காளர்கள் சேர்த்தல் போன்றவைகள் இந்த முகாமில் நடைபெற்று. தற்போது சில வாக்காளர்கள் குறிப்பாக சிறுபான்மை வாக்காளர்கள் சில அரசியல் கட்சிகளால் நீக்கப்பட்டு இருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது.
வாக்கு என்பது இந்திய ஜனநாயகத்தில் ஆட்சியாளர்களை இனம் காட்டும் உரிமை என்பதை மக்கள் அறிந்து கொண்டு தனது ஜனநாயக உரிமையை வாக்காளர்கள் இழந்து விடக்கூடாது என்பதை உணர்ந்த கீழை நியூஸ், பூதக்கண்ணாடி மாத இதழ், சட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும் மக்கள் நல பாதுகாப்புக்கழகம் சார்பாக விழிப்புணர்வு துண்டுபிரசுரம் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களுக்கு மக்கள் விழிப்புணர்வு பெற அனுப்பபட்டது. கீழக்கரை நகராட்சி பகுதியில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக ஜூம்ஆக்களில்களில் கொடுக்கப்பட்டது.
இது சம்பந்தமாக சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசகர் முகம்மது சாலிஹ் ஹீசைன் கூறுகையில் இந்த முகாமில் தவறவிட்ட வாக்காளர்கள் வரும் 07/10/2018,14/10/218 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
கீழக்கரையில் நடந்த சிறப்பு முகாமை கீழக்கரை வட்டாட்சியர் இராஜேஸ்வரி,வருவாய் ஆய்வாளர் சாரதா (எ) லட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










