இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலை., பொறியியல் கல்லூரி மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு பணி மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் ஆய்வு
இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவைத் பொதுத் தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நிறைவடைந்ததை அடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான இராமநாதபுரம் அண்ணா பல்கலை., பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு சம்பந்தப்பட்ட தேர்தல் மண்டல குழு அலுவலர்கள் மூலம் காவல்துற பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித்தனியே 6 பாதுகாப்பு அறைகள், பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு தனியே ஒரு பாதுகாப்பு அறை என ஏழு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளை பொறுத்த வரையில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் (உள் வளாகம்) வாயிலில் தொடர்ந்து 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்கு எண்ணும் மைய வெளி வளாகத்தில் தமிழ்நாடு காவல் சிறப்பு படை பிரிவினர் மற்றும் மாவட்ட காவல் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு காவல்துறை மூலம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களால் அனுமதி வழங்கப்பட்ட வேட்பாளர்கள மற்றும் வேட்பாளர்கள் பிரதிநிதிகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஓம் பிரகாஷ் ஆகியோர் மேற்கொள்ளப்பட்டுவரும் மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித்தனியே 6 பாதுகாப்பு அறைகள், பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு என தனியாக அமைக்கபட்டுள்ள பாதுகாப்பு அறை என ஏழு பாதுகாப்பு அறைகளை நேரடியாக பகுதி,பகுதியாக சென்று பார்வையிட்டு இந்திய தேர்தல் ஆணைய அறிவுரை மற்றும் வழிகாட்டுதல் படி மேற்கொள்ளப்படும் மூன்றடுக்கு பாதுகாப்பை உறுதி செய்து அங்கு வைக்கபட்டிருந்த பதிவேடுகளிலும் கையொப்பமிட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் த சி.முத்துமாரி, உதவி தேர்தல் அலுவலர்கள் எம்.மதியழகன் (மாவட்ட வழங்கல் அலுவலர்-திருவாடானை தொகுதி), ஆர்.சுமன் (ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்-ராமநாதபுரம் தொகுதி), எஸ்.ராமன் (பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர்-பரமக்குடி தொகுதி), க.கயல்விழி (மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்-முதுகுளத்தூர்) உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









