தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை 04.07.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்






பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தென் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வரும் நிலையில், பொது மக்களுக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்க்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர் ஊராட்சி ஒன்றியம் அங்கன் வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் வருகை, அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களின் கல்வித் திறன் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், புதிதாக அமைக்கப் பட்டு வரும் மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என உரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.