தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குளம், தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் நெஹரா, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் முன்னிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொண்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி சிறப்புத் தீவிர திருத்தம்-2026 இன் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து 25.12.2025 அன்று தென்காசி மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் நெஹரா 223-ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாறாந்தை, கல்லத்திகுளம், ஆலங்குளம் ஆகிய பகுதிகளிலும், 222-தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடப்போகத்தி, சடையப்பபுரம், கீழப்புலியூர், ஆயிரப்பேரி ஆகிய பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது புதிய வாக்காளர் சேர்க்கை படிவம்-6 மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பற்றிய விபரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கேட்டு படிவங்களை தென்காசி மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள விஜய் நெஹரா ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவி பால், உதவி ஆணையர் (கலால்) ராமச்சந்திரன், ஆலங்குளம் மற்றும் தென்காசி வட்டாட்சியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

