தமிழ் நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சமக்ரா சிக்சா மற்றும் பாண்டிச்சேரி அரவிந்தா சொசைட்டி சார்பாக நடைபெற்ற கற்பித்தலில் முதலீடு இல்லா புதுமை முயற்சி பயிற்சியில் பல்வேறு பள்ளி ஆசிரியைகள் தங்களது படைப்புகளை சமர்ப்பித்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு அதன் மூலம் சிறந்த புத்தாக்காங்களை சமர்ப்பித்த ஆசிரியர்களை அங்கீகாரம் வழங்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் இராமநாதபுர மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தை சார்ந்த இரகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை A.தங்ஙரத்தின மலர், சின்னான்டிவலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை M.சிக்கந்தரம்மா சகனாஸ், இரகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை S.ஶ்ரீவித்யா, லெட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் தினேஷ் ஆகியோர் 10/07/2019 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் இருந்து விருதுகளை பெற்றனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












