கைவண்டியில் ஏற்றி கொண்டு வரப்பட்ட முதியவர்.. அலைகழித்த இ.எஸ்.ஐ மருத்துவமனை…

மதுரை பாலரங்கபுரத்தை சார்ந்த 75வயது மதிக்கத்தக்க முதியவர் கடுமையான காய்ச்சலுடன் பாலரங்கபுரம் இஎஸ்ஐ மருத்துவமனையை அனுகியுள்ளார், ஆனால் அங்குருந்த பணியாளர்களோ வந்தானவர் என்பதை கூட கருத்தில் கொள்ளாமல்  தத்தனேரி உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்கள்.

மேலும் ஊரடங்கு காரணத்தினால்  வாகனம் ஏதும் கிடைக்காத காரணத்தினால் ட்ரை சைக்கிளில் மதுரை தத்தநேரி உள்ள தலைமை மருத்துவமனைக்கு சென்றுள்ளனர், ஆனால் அங்கும் இங்கே பார்க்க முடியாது என கூறி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என அனுப்பி வைத்துள்ளார்கள். வேறுவழியின்றி 75 வயது முதியவர் மற்றும் அவர் மனைவி, மகள், அவரது சகோதரர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

இவ்வாறு அலட்சிய போக்குடன் செயல்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.  சுமார் 10 கிலோமீட்டர் ட்ரை சைக்கிளில் நோயாளியை கொண்டு வந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!