உள்நாட்டு பொருள்களுக்கு முக்கியத்துவம் தரும் இராமநாதபுரம் பள்ளி..

இராமநாதபுரத்தில் உள்ளது இன்ஃபேன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன் பள்ளி ( INFANT JESUS MATRICULATION SCHOOL) சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு போராடி வெற்றி கண்ட தமிழ் இளைஞர் சமுதாயத்தை போற்றும் வண்ணம், இனி தங்கள் பள்ளியில் வெளிநாட்டு குளிர் பானங்களை மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் விற்க போவதில்லை என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளார்கள்.

இதுபோன்று தமிழ்நாட்டில் 1500 திரையரங்கங்கள் உள்ளது. இவற்றின் விற்பனையகத்தில் இளநீர், கரும்புச்சாறு, மோர் மற்றும் பழச்சாறு வகைகளை விற்பனை செய்வதற்கு திரையரங்க உரிமையாளர் உதவினாலே போதும். விவசாயமும், விவசாயியும் வாழ்வார்கள். இது போன்ற உள்நாட்டு இயற்கை பானங்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ஒவ்வொரு நிறுவனமும் இறங்கினால் விவசாயத்தை வாழ வைக்க நிச்சயமாக முடியும்.

இராமநாதபுரத்தில் உள்ள இந்தப் பள்ளியின் முன்னுதாரண செயலை கீழை நியூஸ் நிர்வாகம் பாராட்டுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!