சிறப்பாக செயல்பட்ட நிலக்கோட்டை வட்டாட்சியருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியராக தனுஷ்கோடி பணியாற்றி வருகிறார்.
இவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து மக்கள் நலன் சார்ந்த விஷயங்களிலும் சமூக அக்கறை கொண்ட விஷயங்களிலும் தனி கவனம் செலுத்தி, தீர்வு காண முடியாத பல்வேறு பிரச்சனைகளை இலகுவாக கையாண்டு தீர்வு கண்டுள்ளார்.
நிலக்கோட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் கோவில் கும்பாபிஷேக பிரச்சினைகள் தொடர்ச்சியாக இருந்து வந்த நிலையில் அவைகளை சுமூகமாக பேசி தீர்த்து மக்கள் ஒற்றுமையுடன் கும்பாபிஷேகம் நடத்த வழிவகை செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக எண்ணற்ற பட்டாக்களை வழங்கி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சிறந்த வட்டாட்சியர் என பெயர் பெற்றவர்.
ஜாதி, மதம், சமூக மோதல்களையும் அது சார்ந்த பிரச்சினைகளையும் முன்னரே கண்டறிந்து அதற்குண்டான தீர்வுகளை வழங்கி பல்வேறு சமயங்களில் ஒற்றுமையை நிலைநாட்டியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிலக்கோட்டை தாலுகாவில் தேர்தல் காலங்களிலும் மற்றும் பல்வேறு விஷயங்களிலும் சிறப்பாகவும் திறம்படவும் செயல்பட்டதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தமது கரங்களால் நிலக்கோட்டை வட்டாட்சியருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி கௌரவித்தார்.
இவரது பணிகள் மென்மேலும் சிறக்க வேண்டுமென உயர் அதிகாரிகள், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment.