வத்தலகுண்டு ரோட்டரி சங்கம் சார்பாக, 78- வது சுதந்திர தின விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன..
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு அரசு நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் பல மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில், சிறப்பு விருந்தினர்களாக,வத்தலகுண்டு ரோட்டரி சங்கத் தலைவர் மருத்துவர் யூசுப் மௌலானா, செயலாளர் மகேந்திர பாண்டியன் துணை ஆளுநர் மாதவன், மற்றும் மூத்த உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தலைமை ஆசிரியர் பட்டாணி முன்னிலை வகித்தார். நிகழ்வின் திட்ட தலைவர் ஆசிரியர் முத்து மோகன் தொகுத்து வழங்கினார். பழைய வத்தலக்குண்டு ஊர் முக்கியஸ்தர்கள், வழக்கறிஞர் முருகதாஸ், வதிலை பசுமை இயக்கம் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் ஆடிட்டர் விஜயன்,காயர் செந்தில், பாண்டித்துரை, ராஜ்குமார், அன்சாரி, முஹம்மது ரபிக், தர்வீஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
You must be logged in to post a comment.