ரயிலில் காரணமின்றி எச்சரிக்கை சங்கிலி இழுத்த விவகாரம்; 2618 பேர் கைது..

ரயிலில் காரணமின்றி எச்சரிக்கை சங்கிலி இழுத்த விவகாரம்; 2618 பேரை கைது – 15.45 லட்ச ரூபாய் வசூல்..!!

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2023 முதல் 2024 மார்ச் 20 தேதி வரை ரயில் பயணத்தின் போது தேவையில்லாமல் ரயிலின் அவசர கால சங்கிலியை இழுத்து ரயிலை பாதியிலே நிறுத்திய விவகாரம் நேற்று வரை சுமார் 2632 வழக்குகள் பதிவு – 2618 நபர்கள் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அபராத தொகையாக இதுவரை சுமார் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அளவிற்கு வசூல் செய்யப்பட்டுள்ளது.

1989 இந்திய ரயில்வே சட்டத்தின்படி, நியாயமான காரணமின்றி எச்சரிக்கை சங்கிலியை இழுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அபராதம் ரூ. 1,000 / ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!