தஞ்சாவூர் லயன்ஸ் கோல்டன் ஹாலில்
தஞ்சாவூர். மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் இந்திய அரசியலமைப்பு தினம் லயன்ஸ் வழக்கறிஞர் ஜான்சன் தலைமையில் நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்தை பாதுகாப்பதென்றும் மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றக் கூடாது என்றும் அரசியல் சட்டம் ஏழை. எளிய சாமானிய மக்களின் நம்பிக்கைக்கு உரியதாக காப்போம் என உறுதிமொழி யேற்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் சந்திரமோகன்,வழக்கறிஞர் ராஜ் மோகன். மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. இராஜேந்திரன். சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்வில் வழக்கறிஞர் கள் ராஜு. சதாசிவம். கீர்த்தி ராஜ் உள்ளிட்ட திரளான வழக்கறிஞர்கள் மற்றும் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
ஏ.கே.சுந்தர், செய்தியாளர் , தஞ்சாவூர்
You must be logged in to post a comment.