உலகின் சூப்பர் பவர் நாடக மாறிய இந்தியா- உலக நாடுகள் மோடிக்கு பாராட்டு.

கொரனோ உலகம் முழுவதும், மிக பெரிய பாதிப்புகளை உண்டாக்கிய நிலையில் 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில், இதுவரை 150 ற்கும் குறைவான நபர்களே கொரனோ அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் மூவர் கொரனோ தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அண்டை நாடான சீனாவில் உருவான கொரனோ, மற்ற நாடுகளில் பரவி உயிர் பலி வாங்கி வரும் சூழலில், எல்லைகளை சீனாவுடன் பகிர்ந்து கொள்ளும் இந்தியாவில், கொரனோ தாக்கம் குறைவாக இருக்கிறது.இது அமெரிக்கபத்திரிகைகளை ஆச்சார்யம் அடைய செய்துள்ளது.

NYT தனது பதிப்பில் இந்தியாவில் எவ்வாறு 150 நபர்களுக்கு மட்டுமே பாதிப்பு இருக்கிறது. இது மிக பெரிய ஆச்சர்யமான விஷயம் என கூறியுள்ளது. இந்நிலையில் சீனாவில் கொரனோ பாதிப்பு வந்தவுடன், மத்திய அரசு முன்னின்று எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம் என கூறுகின்றன.முதற்கட்டமாக விமான நிலையங்களில் கொண்டுவரப்பட்ட தீவிர கண்காணிப்பு முதலானவை, உலகில் அதிகம் மக்கள் வசிக்கும் 2 வது நாட்டில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பட்டதாக கூறப்படுகிறது. சீனாவில் கொரனோ தொற்று உருவான சூழலில், பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் உத்தரவின் பேரில் 16 நபர்கள் கொண்ட கொரனோ தடுப்பு குழு உருவாக்கப்பட்டு, உடனடியாக கண்காணித்து வந்திருக்கிறார்கள். உலகில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா போன்றவை உலக நாடுகளை ஒன்றிணைக்க முன்வராத நேரத்தில், பிரதமர் மோடி சார்க் நாடுகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினர்.

உலக நாடுகளின் சூப்பர் பவராக மாறி வருவதாகவும், மோடியின் செயல்பாடே இதற்கு முக்கிய காரணம் எனவும் வியன் ஊடகம் பாராட்டியுள்ளது. மேலும் பிரதமர் மோடியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா பிரதமர் பாராட்டுகளை தெரிவித்ததுடன், உலகில் சிறந்த தலைவராக இந்திய பிரதமர் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.கொரனோ உலக அளவில் மிக பெரிய பாதிப்பை உண்டாக்கிய சூழலில், இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் காப்பாற்ற பட்டிருப்பதும், மற்ற நாடுகளில் சிக்கியவர்களை மீட்பதும் இந்தியா 2020ன் சூப்பர் பவர் நாடு என்பதை நிரூபித்து வருகிறது. எதிரி நாடான பாகிஸ்தான் கூட பிரதமர் மோடியின், சார்க் கூட்டத்தில் கலந்து கொண்டதில் இருந்தே இதை புரிந்து கொள்ளலாம்.

தகவல்:இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!