இந்திய ஜனாதிபதியின் திமோர் நாட்டு பயணம்; வெளிநாட்டு மருத்துவக் கல்விக்கு புதிய வழியை ஏற்படுத்தும்..

இந்திய ஜனாதிபதியின் திமோர் நாட்டு அரசு முறை பயணம் வெளிநாட்டு மருத்துவக் கல்விக்கு புதிய வழியை ஏற்படுத்தும் என திமோர் நாட்டு பீஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் இந்திய இயக்குநர்கள் தெரிவித்தனர். பல்வேறு ஒப்பந்தங்கள் நிமித்தம் அரசு முறை பயணமாக திமோர் நாட்டிற்கு வருகை புரிந்த இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை இந்திய பிரமுகர்கள் ஐசக் பாஸ்கர், பூ. திருமாறன், டாக்டர் ஐசலின், சேலம் ஆபிரகாம் திமோர் தலைநகர் டிலியில் சந்தித்தனர். ஆசிய கண்டத்தின் ஒரு அங்கமாகத் திகழும் நாடு திமோர். ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷிய நாடுகளுக்கு நடுவே திமோர் அமைந்துள்ளது. இங்கு முதன்முதலாக வருகை தந்த ஜனாதிபதி என்ற பெருமையை திரௌபதி முர்மு பெற்றார். 

இந்திய ஜனாதிபதியை திமோர் பீஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் இந்திய இயக்குனர்கள் ஜசலின், ஐசக் பாஸ்கர் சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன், அகமதாபாத் மன்சுக் சந்தித்தனர். திமோர் நாட்டுக்கு ஜனாதிபதி வந்திருந்த போது பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்கள் நிறைவேறியதாக அந்நாட்டில் அறிவிப்பு வெளியாகியது. இந்திய ஜனாதிபதி திமோருக்கு தனி விமானத்தில் வந்து இறங்கிய போது அந்நாட்டு ஜனாதிபதி ஜோஸ் ரமோஸ் ஹோர்தா, பிரதமர், துணை பிரதமர் மரியானோ அசானமி மற்றும் ஒட்டுமொத்த அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

20 வருடங்களாக திமோரில் கலை, அறிவியல், பொறியியல், பாராமெடிக்கல் என இயங்கி வரும் பீஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய கல்வி பாடத்திட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளின் அடிப்படையில் 4 1/2 வருட மருத்துவக் கல்வி  துவக்கப்படுவதாக டாக்டர் ஜசலின் மற்றும் ஐசக் பாஸ்கர் பத்திரிகையாளர்களிடம் கூறினர். மருத்துவம் படிக்க இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து நடுத்தர வர்க்க மாணவ மாணவியர்கள் பெரிய எண்ணிக்கையில் திமோருக்கு வர விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படும் என சமூக நல ஆர்வலர் திருமாறன் தெரிவித்தார். தேசிய மருத்துவ கமிஷன் 2021 வழிகாட்டுதலின்படி மருத்துவ படிப்பு, கால அளவு, தேவையற்ற தேர்வில் இருந்து விலக்கு, குறைந்த கல்வி கட்டணம், சிரமமில்லாமல் பதிவு, ஆங்கில மொழியில் மருத்துவம் பயில்வது, தமிழ்நாட்டு உணவு வகைகள் என்பது திமோர் பீஸ் பல்கலைக்கழக சிறப்பம்சங்கள்.

மருத்துவப் படிப்பு என்பது தமிழகத்தின் மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்கும் திட்டம். வெளிநாடுகளில் மருத்துவம் படித்து நம் நாடு திரும்பியதும் எழுதும் எப். எம்.ஜி தேர்வும் மருத்துவம் படிக்க நம் பிள்ளைகள் போராடி எழுதும் நீட் தேர்வும் வெளிநாடுகளில் மேற்படிப்புக்குச் செல்லும் நம் மாணவ மாணவியருக்கு பொருந்தாது என்பதையும் கல்வியாளர்கள் உறுதி செய்கின்றனர். கடந்த வருடங்களில் +2 முடித்தவர்கள், நீட்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் திமோர் பீஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பிற்கு சேர்ந்திட இந்த வருடம் அட்மிஷன் துவங்கி விட்டதாக இயக்குனர் டாக்டர். ஏகலைவன் தெரிவித்தார். இது பற்றிய மேலதிக தகவல் பெற 8012365655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு டாக்டர் ஏகலைவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!