கீழக்கரை மற்றும் அனைத்து பகுதிகளில் ஹஜ் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது..

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும்.  அதைத் தொடர்ந்தது துல்ஹஜ் 10 பிறையில் தியாகத் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று (22/08/2018)  இந்தியாவில் தமிழகத்தில் கீழக்கரை மற்றும் அனைத்து பகுதிகளிலும் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.

கீழக்கரையில் பாரம்பரியமான தொழுகைப் பள்ளியான ஜும்மா பள்ளி, தெற்குத் தெரு, கடற்கரைகள் பள்ளி மற்றும் அனைத்து ஜமாத் பள்ளிகளிலும் தொழுகை நடைபெற்றது. அதே போல் நபி வழித் தொழுகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், மக்தூமியா பள்ளி வளாகம், வடக்குத் தெரு சமூக நல அமைப்பு, இந்தியன் தவ்ஹீத் ஜமாத் கிழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை போன்ற சமூக அமைப்புகளால் பல இடங்களில் நடத்தப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!