நேற்று, பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது, ஆந்திர பிரதேச மாநிலம் சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார்
அவருக்கு, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மருதுபாண்டியன் ஏற்பாட்டில் வீரவணக்கம் செய்து அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜவர்மன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஆர்.ஜி.ரத்தினம் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள்,ஒன்றிய நகர நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும், போரில் இந்தியா வெற்றி பெறவும் வேண்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீமல்லம்மாள் காளியம்மாள் ஆலயத்தில் அதிமுக சார்பில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை வழிபாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.