முகமது சதக் கபீர் பப்ளிக் பள்ளியில் “73வது சுதந்திர தின விழா” 15.08.2019 அன்று காலை 9.00 மணி அளவில் தொடங்கியது. சிறப்பு விருந்தினர் சென்சாய் M.P விஜய் தேசிய கொடி ஏற்றி மாணவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார். அதன் பின் சுதந்திர விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சினை 6 ஆம் வகுப்பு மாணவன் H. முகமது இர்பான் இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து பள்ளி முதல்வர் S.N. ஆலியா வரவேற்புரை வழங்கினார். பின் மாணவர்களுக்கு எண்ணங்களில் சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் எண்ணம் தான் நம் வாழ்க்கையின் மூலதனம் என்றும் நம் எண்ணங்களே நம்மை வெற்றி பாதையை நோக்கி கொண்டு செல்லும் என்று கூறி சுதந்திர தின விழா வாழ்த்துரை வழங்கினார்.
அதை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் சென்சாய் M.P. விஜய் அவர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார். எங்கள் பள்ளி நிர்வாக அதிகாரி G. கல்யாண குமார் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்தார். அதன் பின்பு மாணவர்கள் தங்கள் கலைத் திறனையும், பேச்சாற்றலையும் வெளிப்படுத்தினார்கள். அதில் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகம், சுதந்திர உணர்வு, நாட்டுப்பற்று ஆகியவற்றை வெளிபடுத்தும் வகையில் பங்காற்றினார்கள். பல விதமான கலைநிகழ்ச்சிகளின்; மூலம் மாணவர்கள்; சுதந்திர உணர்வை ஊட்டினார்கள். சிறப்பு விருந்தினர் அவர்கள் தன் வாழ்த்துறையில் மாணவர்கள் ஒழுக்கம் மிக்கவர்களாகவும்இ தன்னம்பிக்கை உடையவர்களாகவும் செயல்படவேண்டும் என்று கூறினார்.
ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஆசிரியர்களாக இல்லாமல் ஒரு நல்ல தோழனாகவும் தோழியாகவும் இருந்தால் மாணவர்களின் திறமைகளை எளிமையாக வெளிக்கொணர முடியம் என்றும் கூறினார். நம் பள்ளியில் பயிலும் திவ்யதீக்ஷீதா – 2 ஆம் வகுப்பு மாணவியின் ஸ்கேட்டிங்கின் முழுச்செலவையும் ஏற்றுக் கொண்டார். பின் மாணவர்களின் கலை திறமையை வெகுவாக பாராட்டினார். இறுதியாக எமது பள்ளி ஆசிரியை G. நித்யா நன்றி உரை நல்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print



























