இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஆக்கிடா வலசை ஆரம்பப் பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. கிராமத் தலைவர் ச.ரவி தலைமை வகித்தார். கிராமக் கல்விக்குழு பொருளாளர் M மலைராஜன், பள்ளி மேலாண் குழு தலைவி T. நம்புலெட்சுமி முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் நா.கோமகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் .
சுதந்திர இந்தியாவைப் பேணிக் காப்போம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பி.ஹரிதா சினி, ம.ஜெயப்பிரகாஷ், மு.மகாஸ்ரீ ஆகியோருக்கு, ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் R. கார்த்திக் சார்பில், பரிசு வழங்கப்பட்டது . மேலும்ர ₹. 9,500 மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் ஆக்கிடா வலசை ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் R. கார்த்தி – திவ்யா சார்பில் பள்ளிக்கு அன்பளிப்பாக ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது. பள்ளி இடைநிலை ஆசிரியர் தி.திருமேனிநாயகம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர் கா.திவ்யா மாணவர்களோடு இணைந்து செய்திருந்தார்.
மாணவர்களு க்கு இனிப்பாக கடலை மிட்டாய்களை, கிராமத் தலைவர் திரு.ச ரவி, VEC பொருளாளர் M மலைராஜன் , Ex ஊராட்சி மன்ற உறுப்பினர் R. கார்த்தி ஆகியோர் சார்பில் வழங்கப்பட்டன.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











