கல்வி சுகாதாரத்திற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்; புளியங்குடி நகர்மன்ற தலைவர் சுதந்திர தின உரை..

கல்வி சுகாதாரத்திற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்; புளியங்குடி நகர்மன்ற தலைவர் சுதந்திர தின உரை.

சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்கு மக்கள் பிரதிநிதியாகிய நாம் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா செளந்தரபாண்டியன் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார். இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் நடந்தது. நகர்மன்ற தலைவர் எஸ். விஜயா சௌந்தரபாண்டியன் புளியங்குடியில் உள்ள தேசத்தந்தை காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

மேலும் ஏவிஎஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நகர்மன்ற தலைவர் பேசியதாவது, இந்தியாவின் 77 – வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இன்று, நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்வதற்கும், சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றின் மதிப்புகளுக்கு நம்மை மீண்டும் அர்ப்பணிப்பதற்கும், இது ஒரு நல்ல நாளாகும். மேலும் இந்தியா ஒளிமயமான எதிர்காலம் கொண்ட ஒரு இளம் மற்றும் ஆற்றல் மிக்க நாடு. ஆனால் நாம் ஒன்றாகச் செயல்பட்டால் மட்டுமே சாதிக்க முடியும். ஒவ்வொருவரும் வெற்றி பெற வாய்ப்புள்ள சிறந்த சமூகத்தை உருவாக்க மக்கள் பிரதிநிதியாகிய நாம் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நம்மிடம் உள்ள அதே இயற்கை வளங்களை எதிர்கால சந்ததியினர் அனுபவிக்கும் வகையில் நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!