உசிலம்பட்டியில் தனியார் அமைப்பு சார்பில் பள்ளிக் குழந்தைகள் தேசியக்கொடியுடன் சுதந்திர தின ஸ்கேட்டிங் ரோடுஷோ…

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை அரசியல் கட்சியினர் தன்னார்வ அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ரஞ்சித் ஸ்கேட்டிங் அகடாமி என்ற தனியார் அமைப்பு சார்பில் பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற சுதந்திர தின ஸ்கேட்டிங் ஊர்வலம் நடைபெற்றது.முன்னதாக மதுரை ரோட்டிலுள்ள பிஆர்சி பணிமனையின் முன் தேசியக்கொடியுடன் ஆரம்பித்த இந்த ஸ்கேட்டிங் ஊர்வலம் சுமார் 2கி.மீட்டர் தூரம் சென்று பிஎம்டி கல்லூரி அருகே முடிவடைந்தது.இதில் ஏராளமாண மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.உசிலம்பட்டியில் முதன் முறையாக சுதந்திர தின ஸ்கேட்டிங் ரோடுஷோ நடைபெற்றது காண்போரை மனதில் பரவசத்தை ஏறப்படுத்தியது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!