சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் மாநிலத் தலைவர் கே எஸ் அப்துல் ரஹ்மான் கொடியேற்றினார். முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.என். சிக்கந்தர் சிறப்புரையாற்றினார்.
இந்தியாவின் குடிமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய இந்நாட்டின் சுதந்திர தினத்தை நாட்டின் குடிமக்கள் பலரும் குறிப்பாக மணிப்பூர் மக்களும் வட இந்திய முஸ்லிம்களும் துக்கத்துடன் கடந்து செல்கின்றனர்.
இன அழிப்பு நடைபெறும் நாட்களில் எப்படி மகிழ்ச்சியுடன் சுதந்திர தினத்தை கொண்டாட முடியும்?
ஆங்கிலேயரின் ஷீ நக்கிகளாக இருந்தவர்களின் வாரிசுகளின் கைகளில் தேசத்தின் சுதந்திர கொடியேற்றப்படுகின்ற போது தங்கள் உயிர் உடமைகள் அனைத்தையும் இழந்து சுதந்திரம் பெற்றவர்களின் வாரிசுகள் எப்படி மகிழ்ச்சியாக கொண்டாட முடியும்.?
நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தேசப்பிதா மகாத்மா காந்தியின் உயிரைப் பறித்த இந்துத்துவ – சனாதன – பாசிச – சங்பரிவார் பயங்கரவாதி கோட்சேவின் வாரிசுகள் கைகளில் நாட்டின் அதிகாரம் உள்ள போது காந்தியின் மக்கள் எப்படி மகிழ்ச்சியுடன் சுதந்திர தினத்தை கொண்டாட முடியும்?
தலித் மக்கள் குடிக்கும் நீரில் பீயும் மூத்திரமும் கலக்கும் ஆதிக்க வெறி பிடித்த மண்ணில் எப்படி மகிழ்ச்சியுடன் சுதந்திர தினத்தை கொண்டாட முடியும்?
எதிர் சமூக பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்யும் நாட்டில் எப்படி மகிழ்ச்சியுடன் சுதந்திர தினத்தை கொண்டாட முடியும்?
வசிக்கும் வீட்டை அரசே இடித்து தள்ளி, தன் நாட்டு மக்களையே நடுத்தெருவில் பரிதவிக்க விடும் நாட்டில் எப்படி மகிழ்ச்சியுடன் சுதந்திர தினத்தை கொண்டாட முடியும்?
விடை தேடும் வினாக்களை தொடுத்தார்கள் தலைவர்கள். உள்ளத்தில் இருந்து அல்ல, உதட்டில் இருந்து வாழ்த்துகள் என அவர்கள் கூறினார்கள்.
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் ரெய்ஹான் நிகழ்ச்சியை வழிநடத்தினார். வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் உமர் முக்தார் நன்றி கூறினார்.
வெல்ஃபேர் கட்சி மாநில துணைத்தலைவர் முஹம்மது கவுஸ் மாநிலச் செயற்குழு உறுப்பினர் முஜம்மில் இப்ராஹிம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.


You must be logged in to post a comment.