தென்காசியில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர், மாநில துணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோதர் மைதீன், மாநில அமைப்பு செயலாளர் நெல்லை அப்துல் மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பிரச்சார குழுவில் இடம் பெற்றுள்ள தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹைதீன் சாகிபுக்கு வாழ்த்து தெரிவிப்பது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசை கண்டிப்பதோடு இத்திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்றும், வரும் செப் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நீண்ட காலம் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய முதல்வருக்கு வேண்டுகோள் வைப்பது என்றும், தென்காசி மாவட்டத்திற்கு ஹாக்கா கமிட்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தென்காசி மாவட்ட தலைவராக தலைவர் தென்காசி அப்துல் அஜீஸ், மாவட்டச் செயலாளர் பாம்புக்கோவில் சந்தை செய்யது பட்டாணி, மாவட்டப் பொருளாளர் கடையநல்லூர் செய்யது மசூது, மாவட்ட முதன்மை துணைத் தலைவர்களாக புளியங்குடி அப்துல் வஹாப், மாவட்ட துணைத் தலைவர் முதலியார்பட்டி அப்துல் காதர், கடையநல்லூர் அக்பர் அலி, புளியங்குடி கலீல் ரஹ்மான், துணைச் செயலாளர்களாக கடையநல்லூர் ஹைதர் அலி, புளியங்குடி அப்துல், இரவணசமுத்திரம் முஹம்மது இக்பால், தென்காசி ஜலாலுதீன், கடையநல்லூர் அய்யூப்கான், ஒருங்கிணைப்பு ஆலோசனைக்குழு கௌரவ ஆலோசகர் விடி.எஸ்.ஆர் முஹம்மது இஸ்மாயில், செய்யது சுலைமான், முஹம்மது இஸ்மாயில், பாம்புக்கோவில் செய்யது இப்ராஹிம், முஹைதீன் ஹஜ்ரத், நெல்லை அப்துல் மஜீத், முஸ்லிம் மாணவர் பேரவை அணி அமைப்பாளர் பொட்டல் புதூர் ரிபாய், முஸ்லீம் யூக் லீக் அணி அமைப்பாளர் கடையநல்லூர் செய்யது அபுதாகிர், இந்திய யூனியன் விமன்ஸ் லீக் அணி அமைப்பாளர் இரவண சமுத்திரம் சபுராள் பேகம், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் புளியங்குடி அப்துல் அஜீஸ், சுதந்திர தொழிலாளர் யூனியன் அணி அமைப்பாளர் கடையநல்லூர் முகம்மது மைதீன், வர்த்தக அணி அமைப்பளர் தென்காசி அஹமது மீரான், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நெல்லை அப்துல் மஜீத், செய்யது சுலைமான், செய்யது மசூது, அபுபக்கர், அப்துல் ரஹ்மான், விடிஎஸ்ஆர் முஹம்மது இஸ்மாயில், முதலியார் பட்டி அப்துல் காதர், புளியங்குடி அப்துல் வஹாப், கடையநல்லூர் முஹம்மது துராப்ஷா, கடையநல்லூர் முஹம்மது கோயா, புளியங்குடி முஹம்மது அல் அமீன், நல்லாசிரியர் செய்யது மசூது, கடையநல்லூர் ஆசிரியர் முஸ்தபா, கடையநல்லூர் பேட்டை ஜபருல்லாஹ், கடையநல்லூர் ஹைதர் அலி, தென்காசி முகம்மது அலி புளியங்குடி ஜாகிர் அப்பாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









