இஸ்லாமிய இறைதூதர் மீது அவதூறு… பிரான்ஸ் நாட்டின் அதிபரை கண்டித்து மதுரையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக ஆர்ப்பாட்டம்..

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மதுரை மாவட்டம் சார்பாக நபிகள் நாயகம் மீது அவதூறு பரப்பும் பிரான்ஸ் நாட்டையும், அதன் அதிபர் மெக்ரோனையும் கண்டித்து, நவம்பர். 2 மாலை மதுரை கிரைம் பிரான்ச் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முஹம்மது அப்துல்லாஹ் ஸஆதி, தலைமை வகித்தார். செயலாளர் முஹம்மது பைசல் மக்தூமி வரவேற்புரை நிகழ்த்தினார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுசெயலாளர் அர்ஷத் அஹமது அல்தாபி,கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மேற்கு பகுதி தலைவர் செய்யாது இஸ்ஹாக் ஜாக் நிர்வாகி அய்யூப் அலி பைஜி,கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மாவட்ட தலைவர். முகம்மது இப்றாகீம். ஆகியோர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு .பிரான்ஸ் அதிபருக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினர்கள்.

இறுதியாக ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநகரச் செயலாளர். முகைதீன் நாபியீ நன்றியுரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம்.மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!