அருப்புக்கோட்டை அருகே மனைவியின் தகாத உறவை தட்டிக் கேட்ட கணவனை உறவினர்களுடன் சேர்ந்து கட்டையால் தாக்கிய மனைவி – முகத்தில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மேல தொட்டியங்குளத்தைச் சேர்ந்த சேர்ந்த கட்டிட தொழிலாளியான கருப்பசாமி என்பவருக்கும் விருதுநகர் அருகே பாவாலி கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் மனைவி மற்றொரு நபருடன் தகாத உறவு வைத்துள்ளதை கணவர் கருப்புசாமி தட்டிக் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று இரவு மனைவியிடம் தகாத உறவை தட்டிக்கேட்ட தகராறில் ஈடுபடவே கட்டிடத் தொழிலாளியின் மனைவி செல்வி மற்றும் அவரது தங்கை மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் பேட் மட்டை மற்றும் உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அப்போது கருப்பசாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கட்டிட தொழிலாளி கருப்பசாமியை காப்பாற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்பு அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் முகத்தில் பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு முகத்தில் பயங்கர காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கருப்பசாமியை மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட தொழிலாளியை தாக்கிய மனைவி மற்றும் அவரது உறவினர்களை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.