முதுகுளத்தூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது..

இராமநாதபுரம் மாவட்டம்  முதுகுளத்தூர் வட்டாரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்குள்ள கிராமங்களில் தண்டோரா மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் முதுகுளத்தூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் வீ.வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் காவல் கண்காணிப்பாளர்போலீஸ் படையுடன் முதுகுளத்தூர் அருகே பொதிகுளம் கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கிருந்த மூன்று பேர் தப்பி ஓடினர். அதில் நெறிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த முத்து பெருமாள் மகன் சதீஷ்குமாரை (29) போலீசார் பிடித்தனர். மேலும் அங்கிருந்த கள்ளச்சாராய பாட்டில்கள் மற்றும் 40 லிட்டர் சாராய ஊறல்களை அழித்தனர். இதுகுறித்து இளம்செம்பூர் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, சதீ்ஷ்குமாரை கைது செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!