தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் விற்பனையாவதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை பொதுவெளியில் தங்கு தடையின்றி விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. பழைய லாட்டரி போல் இல்லாமல், புதிய வகையில் விற்பனையாகும் இந்த லாட்டரி சீட்டுகளால் விவசாயிகள், கூலித் தொழிலாளிகள், இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த லாட்டரியை இளைஞர்களே விற்பனை செய்வதாகக் கூறும் பொதுமக்கள், தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்கப்படுவது தெரிந்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.


You must be logged in to post a comment.