இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் ஜோதிமுருகன், தாமரைக்கண்ணன் மற்றும் போலீசார் மதுவிலக்கு தீவிர வேட்டையில் இன்று (25.10.2020) அதிகாலை ஈடுபட்டிருந்தனர். வெள்ளரி ஓடை கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் குணசேகரன் தனது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் அவரது வீட்டை சோதனையிட்டதில் 180 மில்லி அளவுள்ள 353 மதுபாட்டில்கள் ,375 மில்லி அளவுள்ள 24 மதுபாட்டில்கள் மற்றும் 750 மில்லி அளவுள்ள 52 பீர் பாட்டில்கள் என 429 மதுபாட்டில்களை கைப்பற்றி குணசேகரனை கைது செய்தனர்.
மதுபாட்டில்களை கைப்பற்றிய ஜோதிமுருகன், தாமரைக்கண்ணன் தலைமையிலான போலீசாரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இகார்த்திக் பாராட்டினார்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் நேற்று ( 24.10.2020) அன்று போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 85 பேரை, அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 44 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1,688 புகையிலை பாக்கெட்கள், 683 மது பாட்டில்கள், ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


You must be logged in to post a comment.