இன்று (12/10/2023) காலை 1030 மணி அளவில் துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கி வெளியே செல்லும் வழியில் கழிவறை ஒன்று உள்ளது இதனை விமான நிலையத்தின் உட்பகுதியில் விமானம் ஏறும் பயணிகளும் விமானத்திலிருந்து இறங்கு பயணிகளும் பயன்படுத்துவர். இன்று பகல் 1மணி அளவில் கழிவறை பகுதிகளில் ரோந்து சென்ற மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் கழிவறையில் நான்கு உருண்டைகள் கிடப்பதாக மத்திய சுங்க இயலாக்கா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மத்திய சுங்க இலாக்காவினர் சோதனை செய்த பொழுது அவை தங்கம் என கண்டறியப்பட்டது.
ஒரு கிலோ எடையில நான்கு தங்க உருண்டைகள் கிடப்பதை சுங்க இலா காவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தங்க உருண்டைகளை கைப்பற்றி சோதனை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.