தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர் கல்வி கற்பிப்பதில் சிறப்பிடம் பெற்றுள்ள இலஞ்சி டி.எஸ்.டேனியல் பிஎட் கல்லூரியை பள்ளி கல்வித் துறை மாவட்ட திட்ட அலுவலர் பாராட்டினார். தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் விளையாட்டு விழா, இளைஞர் தின விழா மற்றும் உணவுத் திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வில், கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் கலா வின்சிலா முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் ஷீலா நவரோசி வரவேற்றார். பள்ளி கல்வித்துறை மாவட்ட திட்ட அலுவலர் காதர் முகைதீன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி கல்லூரியினை பாராட்டி பேசினார்.




இந்நிகழ்வில், சுரண்டை காமராஜர் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ஏகேஎஸ்டி சேர்ம செல்வம், செங்கோட்டை அரசு நூலகர் ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித் துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயாளன், வட்டார ஒருங்கிணைப் பாளர்கள் ஐயப்பன், சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து மாணவ ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் உதவி பேராசிரியர்கள் ஜெனிபர், லீதியாள் சொர்ண ஜெயா, ஐரீன், நூலகர் முனைவர் ஏஞ்சலின், அனிதா, அலுவலக பணியாளர்கள் ப்ரெட்ரிக், ஷேரன், பேதுரு, லட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஐசக் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.