இலஞ்சி பி.எட் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில், தென்காசி வி.டி.எஸ்.ஆர் நிறுவனம் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகள் கல்லூரி மாணவிகள் இடையே நடந்தன. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் (பொ) கலா வென்சிலா வரவேற்றார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு, விவசாயத்தை பாதுகாத்தல், நீர் மாசுபடுதலை தடுத்தல், வனப் பாதுகாப்பு, போதை தடுப்பு ஆகியவற்றை மையப்படுத்தி மாணவிகள் தத்ரூபமாக சிலை போன்று நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட முதன்மை அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.

 

நிகழ்ச்சியில் இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவி சின்னத்தாய், திமுக தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் சார்பில், பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்கள், ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், பேரூராட்சி துணை தலைவர் முத்தையா, திமுக இளைஞரணி சுப்பிரமணியன் ஆகியோருடன் இலஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் குமார் பாண்டியன், வி.டி.எஸ்.ஆர் இம்ரான்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!