இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு வரவேற்பு..

தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் கடந்த 19 ஆம் தேதியன்று புதிய கல்வியாண்டு துவங்கியதை முன்னிட்டு 22-ஆம் தேதி மாணவ ஆசிரியர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கரவொலி எழுப்பி இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கி மாணவ ஆசிரியர்கள் அனைவரும் வரவேற்கப்பட்டனர்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் (பொ) ஷீலா வரவேற்றார். ஒய்எப்சி ஊழியர் பிச்சையா வாழ்த்துரை வழங்கினார். சுரண்டை பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் எட்வின் மற்றும் துறை தலைவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் லீதியாள் சொர்ண ஜெயா, ஜெனிபர், ஹெப்சி, நூலகர் முனைவர் ஏஞ்சலின், உடற்கல்வி ஆசிரியர் ஐசக், அலுவலக பணியாளர் பிரெட்ரிக், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் மாணவ ஆசிரியர்களுக்கு இனிப்பு மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!