தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் முன்னாள் மாணவ ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் (பொ) தங்கம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏஞ்சலின் வரவேற்றார். முன்னாள் முதல்வர் முனைவர் சகுந்தலா இஸ்ரேல், முன்னாள் பொறுப்பு முதல்வர் சில்வியா கேத்தரின், முன்னாள் பேராசிரியர்கள் ஜான்சி தேவநேசம், மெர்சி ஜோகன்னா, அலுவலக முன்னாள் அலுவலர்கள் வெற்றி, பிரிசில்லா சுகி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.



முன்னாள் மாணவ ஆசிரியர்கள் மலரும் நினைவுகள், அனுபவங்கள் குறித்து மகிழ்ச்சியுடன் உரையாடினர். இதில் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரி தென்னகத்தில் சிறந்த கல்வியியல் கல்லூரி எனவும், இக்கல்லூரின் மூலம் தங்கள் வாழ்வு வளம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ ஆசிரியர் மன்சூரா தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் ஜெனிபர், லீதியாள் சொர்ண ஜெயா, ஹெப்சி, உடற்கல்வி ஆசிரியர் ஐசக், அனிதா, அலுவலக பணியாளர்கள் ப்ரெட்ரிக், திவ்யா, பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவ ஆசிரியர் ஏஞ்சல் ஷர்மிளா நன்றி கூறினார்.
செய்தியாளர்- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.