தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் தாளாளர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் தங்கம், ஒருங்கிணைப்பாளர் உடற்கல்வி ஆசிரியர் ஐசக் ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாணவ ஆசிரியர் ஜெஸ்லின் அமிர்தா வரவேற்று பேசினார். ஜான்சி ராணி திருமறை பகுதி வாசித்தார். இலஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் சின்னத்தாய் தேசிய கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் ஜெயக்குமார் ரஞ்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
பள்ளி ஆட்சிக்குழு உறுப்பினர் அந்தோணி சுதந்திர போராட்டம் குறித்து பேசினார். மாணவ ஆசிரியர்கள் சசி, ரஞ்சினி, சித்ரா, சஜிதா பர்வின், தீப லட்சுமி, ரிஸ்வானா செரின், ஆகியோர் தேசத் தலைவர்கள் குறித்து உரையாற்றினர், தொடர்ந்து சுதந்திர தினம் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உதவி பேராசிரியர்கள் ஷீலா நவரோசி, லீதியாள் சொர்ண ஜெயா, ஜெனிபர், ஹெப்சி, நூலகர் முனைவர் ஏஞ்சலின், அனிதா, அலுவலக ஊழியர்கள் ப்ரெட்ரிக், பேதுரு, லட்சுமி மற்றும் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர்கள், கலந்து கொண்டனர். மாணவ ஆசிரியர் கவி பிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பவித்ரா நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.