*தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மாநில பொதுகுழு கூட்டம் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது*
தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மாநில பொதுகுழு கூட்டம் மதுரை வில்லாபுரம் ரய்யான் கன்வென்சன் ஹாலில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முகமது பஷீர் அவர்கள் தலைமை உரை ஆற்றினார் மற்றும் லியாகத் தலைவர்கள் வரவேற்புரையாற்றினார் மற்றும் முகமது பெய்க் சாஹிப் அவர்கள் தொகுப்பரை ஆற்றினார் மற்றும் காஜா முகைதீன், கான், கவி ஜாபர், அன்வர் சாஹிப், ஆலம் ஹாஜியார், ஜியாவுதீன் ஹாஜியார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் அதனைத் தொடர்ந்து காஜா முகைதீன் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார் அதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்களை ஆரிப் சுல்தான் அவர்கள் வாசித்தார் அவை பின்வருமாறு
1)பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகக் குழுவை இப்பொதுகுழு அங்கீகரிக்கிறது.
2) முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடை 3.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்த மாநில அரசை வலியுறுத்த வேண்டும்
3) வக்ஃப் திருத்த சட்டம் கொண்டு வருவதை இப் பொதுகுழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த வக்ஃப் திருத்த சட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பின் மூலம் பொது கூட்டங்கள் மக்கள் திரள் ஆர்பாட்டம். சட்ட ரீதியான போரட்டம் நடத்த வேண்டும்
4) வக்பு சொத்துக்களில் கல்வி நிலையங்கள் நிறுவுவதற்கு 30 ஆண்டு கால குத்தகை கொடுக்கும் அதிகாரத்தை மாநில அரசு வக்பு வாரியத்திற்கு உடனடியாக அளிக்க வேண்டும்
5)பெரிய முஹல்லாக்கள் கல்வியில் கவனம் செலுத்தி பள்ளி, கல்லூரிகள் வர திட்டங்கள் வகுக்க வேண்டும்
6) அனைத்து மஸ்ஜிதுகளிலும் இளைஞர் குழுவை உருவாக்க வேண்டும்
7) ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலும் பைத்துல்மால் ஏற்படுத்த வேண்டும்
8) மத்திய, மாநில அரசின் சிறுபான்மை நலத்துறையின் நலதிட்டங்கள் பற்றி நமது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பயனடைய செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றுகிறது தேவைப்படும் இடங்களில் கபர்ஸ்தான் என்ற அடக்கஸ்தளம் அமைத்திட அரசு ஆவணம் செய்ய வேண்டும்
10) அனைத்து வழிபாட்டுதலங்களுக்கு மின்சார கணக்கீடு குறைந்தபட்ச ஒரே அளவில் வேண்டும் என்று அரசை வலியுறுத்த வேண்டும்
11)தமிழகத்தில் மத நல்லிணக்கம், சகோதரதுவத்தை சிதைக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது அரசு மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இந்நிகழ்வில் தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.