கீழக்கரை அல் பையினா மெட்ரிகுலேசன் பள்ளியில் துல்ஹஜ் மாதத்தை முன்னிட்டு கடந்த 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ‘இஹ்ராம் தினம்’ சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவ மாணவிகள் வீட்டிலிருந்து பள்ளிக்கு புறப்படும் போதே இஹ்ராம் உடையணிந்து பள்ளிக்கு அணிவகுத்து சென்ற காட்சி காண்போர் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. இந்நிகழ்ச்சியில் புனித ஹஜ்ஜின் போது இறைவன் காட்டி தந்த வழியில் கடைபிடிக்க வேண்டிய கிரியைகள் குறித்த மாதிரிகள் பள்ளியின் மாணவ மாணவிகளால் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.




இந்நிகழ்ச்சியின் மூலம் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் சம்பந்தமான வரலாற்று சம்பவங்கள் குறித்தும், புனித ஹஜ் பயணத்தின் போது செய்ய வேண்டிய காரியங்கள் சம்பந்தமாகவும் மாணாக்கர்கள் தெரிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த பெற்றோர்களும், மாற்று சமுதாய மக்களும், மதரஸா நிர்வாகிகளும், மாதிரிகளை பார்வையிட்டு சென்றனர். இது போன்ற நிகழ்ச்சிகளால் சிறு வயதிலேயே மாணவ பருவத்தினருக்கு புனித ஹஜ் பயணம் செல்வது பற்றிய ஆர்வமும், அது சம்பந்தமான செயல்பாடுகளும் எளிதாக விளங்கும்.




Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










Mashaa allah