ஒவ்வொரு வருடமும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ரமலான் 30 நாட்களிலும் திருச்சி சிறையில் உள்ள இஸ்லாமிய சிறை கைதிகளுக்கு தேவையான சஹர் சாப்பாடும், இப்தார் நோன்பு திறப்பதற்கு தேவையான பழங்கள் மற்றும் உணவு பொருட்கள் அனைத்தும் திருச்சி மாவட்ட தமுமுகவினர் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
பெருநாள் தினத்தன்று திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு மாவட்ட தலைவர் சகோதரர் முஹம்மது ரபிக் மற்றும் மாவட்ட செயளாலர் மஞ்சக்குடி பாபு அவர்களின் தலைமையிலான குழு, மட்டன் பிரியாணியை சமைத்து சிறையில் உள்ள ஆண் சிறை கைதிகள் மற்றும் பெண் சிறை கைதிகள் 2550 பேருக்கு விருந்து அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வை வழக்கமாக நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டும் வழக்கம்போல் தமுமுகவினர் சிறைச்சாலையில் பெருநாளைக் கொண்டாடினர். மேலும் திருச்சி மத்திய சிறையில் உள்ள அனைத்து இஸ்லாமிய சிறை கைதிகளும் பெருநாள் கொண்டாடும் விதமாக அனைவர்களுக்கும் புத்தாடை வழங்கி மகிழ்ந்தனர்.
மேலும் அங்குள்ள சிறை பள்ளிவாசலை புணரமைத்து அதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர். இந்நிகழ்வின் போது விருந்தளித்த தமுமுக சகோதரர்களுக்கு சிறைவாசிகள் தங்களின் குடும்பத்தவர்களை கண்டதைப் போல எண்ணி ஆரத்தழுவி கட்டி அணைத்து தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். சமய நல்லிணக்கம் போற்றும் விதமாக அனைத்து மத சிறை கைதிகளுக்கும் பிரியாணி வழங்கியதை சிறை கண்கானிப்பாளர் வெகுவாக பாராட்டினர். இந்த மனிதநேய பணியாகத்தான் உங்கள் தமுமுகவின் இந்த செயல் அமைந்துள்ளது என்று கூறினார்.





You must be logged in to post a comment.