கீழக்கரையில் புனித ரமலான் மாதத்தை ஒட்டி நன்மையான விசயங்களை போட்டி போட்ட வண்ணம் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் கீழக்கரையில் உள்ள பல சமூக அமைப்புகள் தான் என்ற வட்டத்திற்குள் நின்ற விடாமல் தேவையுடையவர்களுடைய கண்டறிந்து அவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
கீழக்கரை சின்னக்கடை தெருவைச் சார்ந்த இளைஞர்கள் உத்திரகோசமங்கை அருகில் உள்ள கொந்தன்குளம் என்ற கிராமத்தில் உள்ள மக்களுக்கு சஹர் நேர சாப்பாடு ஏற்பாடு செய்து விருந்து கொடுத்தனர்.
இவ்விருந்தில் அவ்வூர் மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடனும் சந்தோசத்துடனும் விருந்தில் கலந்து கொண்டனர். மேலும் சின்னக்கடை இளைஞர்களே அந்த கிராமத்து மக்களுக்கு இறுதி வரை உணவுகளை பறிமாறினர்.




You must be logged in to post a comment.