இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரஹிம் கூறியிருப்பதாவது : இந்த அவசர சட்டத்தால் கணவனை பழி வாங்க துடிக்கும் சில பெண்களுக்கு பயன்பெறுமே ஒழிய வேறு ஒன்றுமில்லை .உதாரணமாக டவுரி சட்டம் எப்படி சில பெண்கள் தவறாக பயன்படுத்தி அந்த சட்டம் தூக்கி எறியப்பட்டதோ அது போன்றே இந்த முத்தலாக் தடை அவசர சட்டம் .முத்தலாக் என்றால் ஏதோ பக்கத்தில் படுத்து இருக்கும் மனைவியை எழுப்பி தலாக் தலாக் தலாக் என முஸ்லீம் ஆண்கள் சொல்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்காக பாஜக அரசு முயல்கிறதை வன்மையாக கண்டிக்கிறோம்.குடும்பத்தினர் மூலமும் ஜமாஅத்கள் மூலமும் சமுதாய அமைப்புகள் மூலமும் சமரசம் பேசி முடியாத சூழ்நிலையில் தான் தலாக் பயன்படுத்த படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.முஸ்லீம்கள் எல்லாம் வேற்று கிரகத்தில் பிறந்தவர்கள் அல்ல இந்த மண்ணிலே பிறந்து இஸ்லாமிய கலாச்சார பண்பாடுகளை பின்பற்றி இந்த காற்றையே சுவாசித்து வாழ்கின்ற சாதாரண மக்கள் ..
இந்து விதவை பெண்கள் மறுமணம் செய்ய சட்ட ரீதியான அங்கீகாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினால் வரவேற்கலாம் ..அதைவிடுத்து முத்தலாக் தடை அவசர சட்டம் என்பது முஸ்லீம்களுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் காழ்ப்புணர்ச்சியே காட்டுகிறது.முத்தலாக் தடை அவசர சட்டம் என்பது முஸ்லீம்களுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்படே என்பதே ஒழிய முஸ்லீம் பெண்களுக்கு ஆதரவான சட்டமில்லை, முத்தலாக் தடை அவசர சட்டத்தை உடனே மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்..என இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரஹிம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









