ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பாக, இடைநிலை பதிவு முன்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வினோத் பாபு தலைமையில் மாவட்ட செயலாளர் முத்துசாமி முன்னிலையில் “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோஷத்துடன், ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், திமுக அரசு 2021 தேர்தலில் வெளியிட்ட அறிக்கையில் வழங்கிய 311வது வாக்குறுதியை மேற்கோளாகக் காட்டி, “மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நிலைநாட்டப்படும் என நம்பிக்கை இருந்தது. ஆனால் 311 வாக்குறுதி இன்று வரை செயல்படுத்தப்படவில்லை” எனக் குற்றம்சாட்டினர்.
மேலும், “பதிவுக்கு முந்தைய இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்” என்ற நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதையும் வலியுறுத்தினர்.