இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள சின்ன இதம் பாடலில் உள்ள மீனாட்சி மெட்ரிகுலேசன் பள்ளியின் முதலாம் ஆண்டு மழலையர்களுக்கு பட்டம் அளிப்பு விமர்சையாக நடைபெற்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மழலையர்களுக்கு சி.ஆர் பி.எப் துணை படை தலைவர் உதயகுமார் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில் “ நான் இந்தப் பகுதியில் பிறந்து, இங்கு உள்ள பள்ளியில் படித்தேன். விவசாயம் நாம் எப்படி விதை விதைத்து தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்கிறோமோ, அதை போல் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படிப்படியாக படிக்க வேண்டும், நான் இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் நீ வருங்காலத்தில் என்ன வேலைக்கு செல்வாய் என்று கேட்டேன், ஐ.ஏ.எஸ், ஐ.பி.ஸ் என பல வேலைகளை சொன்னார்கள். அதை கண்டு பெருமை அடைகிறேன். பெற்றோர்கள் ஆசிரியர் களுடன் தொடர்புடன் இருக்க வேண்டும். டவுனில் கிடைக்க கூடிய படிப்பை கிராமத்தில் கொடுக்கும் மீனாட்சி மெட்ரிக் பள்ளியை பார்ப்பதற்க்கு நான் பெருமை படுகிறேன், நான் படிக்க இராமநாதபுரம், பரமக்குடி, மதுரை செல்ல வேண்டி இருந்தது. குழந்தைகள் போட்டி தேர்வை எதிர்கொள்வதற்க்கு பள்ளியில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்” என்றார்.
பின்னர் பள்ளி முதல்வர் செந்தில் முருகன் மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், இப்பள்ளி மாணவ மாணவிகள் டேலண்ட் ஷோ போட்டியில் கலந்து கொண்டு அவர்கள் அறிவுத் திறனை வெளிப்படுத்தினர். இப்பள்ளியில் இருந்து பீல்டு டிரிப்பாக இராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்திற்க்கு அழைத்து சென்று, அவர் படித்த விதம் வேலை பார்த்து பல உயரிய பதவிகளை அடைந்த விதம் பற்றி எடுத்துரைத்தோம். மண்டபத்தில் மெரைன் எக்ஸ்பிஷன் அழைத்து சென்று மீன்களின் வகை பற்றி எடுத்துரைத்தோம், வினாடி வினா, ஒவியம், கட்டுரை போட்டிகரள் நடத்தி உள்ளோம், தனித்திறமை போட்டி பயிற்ச்சியாக நடன ஆசிரியர் பாலாஜி மூலம் பரதநாட்டியம் பயிற்ச்சியும், யோகா, ஸ்கேட்டிங், சிலம்பம், செஸ், கேரம், பேட்மிட்டன், கிரிக்கெட் என பல்வேறு பயிற்ச்சிகள் கொடுக்கப்படுகின்றன என்றார். இந்த சிறிய விவசாய கிராமத்தில் மதுரை சென்னை பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் செய்முறை கல்வி நடைமுறை கல்வி அளித்து வருகிறோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைவர் கோவிந்தன், பள்ளி தாளார் மகேந்திரன், மதுரை காமராஜர் பல்கலை கழக கன்ட்ரோலர் ஆப் எக்ஸ ச மினேசன் முனைவர் ரவி, சார்பதிவாளர். சங்க தலைவர் சார் பதிவாளார் இளங்கோவன் சிறப்புரையாற்றினர். சப் இன்ஸ்பெக்டர் ஆப் போலிஸ், இணை சார் பதிவாளர் ஜெகதீசன், இணை சார்பதிவாளர் இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மணிவண்ணன் சிறப்புரையாற்றினார், அரசு கேபிள் டிவி தாசில்தார் செய்யது முகம்மது, ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












