ஒரே கிளிக்கில் அக்கவுண்ட்டில் இருக்கும் மொத்த பணமும் மாயமாகும்! வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஐசிஐசிஐ வங்கி..

ஒரே கிளிக்கில் அக்கவுண்ட்டில் இருக்கும் மொத்த பணமும் மாயமாகும்! எச்சரிக்கும் ஐசிஐசிஐ வங்கி! ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றமானது பல வழிகளில் நம் வாழ்க்கையை எளிதாக்கும் அதே நேரம், சைபர் கிரைம் போன்ற அச்சுறுத்தலுக்கும் வழிவகுத்துள்ளது. டெக்னலாஜி தொடர்ந்து அப்டேட்டாகி வருவது போல டிஜிட்டல் மோசடிகளில் ஈடுபடும் மோசடிக்காரர்களும் தங்கள் திருட்டு முயற்சியில் தொடர்ந்து புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நம்மை ஏமாற்றி வாங்கி கணக்கில் இருக்கும் பணத்தையும் பிற முக்கிய தனிப்பட்ட டேட்டாக்களையும் திருட முயற்சிக்கும் நோக்கில், மோசடி செய்பவர்கள் பல புதிய உத்திகளை கையாளுவது குறித்து மக்கள் எப்போதுமே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் QR குறியீடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற சமீபத்திய வழிமுறைகளைப் பயன்படுத்தி சைபர் கிரிமினல்கள் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சைபர் மோசடிகளை போன் கால், மேசேஜ், வாட்ஸ்அப் மூலமாக புகார் அளிக்க வசதி இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. அதில் ஐசிஐசிஐ வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பணம் திருடப்பட வாய்ப்பு இருக்க கூடிய புதிய மோசடி ஒன்றை பற்றி கூறி கவனமாக இருக்குமாறு எச்சரித்து உள்ளது. ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அந்த எச்சரிக்கை செய்தியில் உங்களை கிளிக் செய்ய தூண்டும் மெயில்கள் அல்லது மெசேஜ்களில் வர கூடிய ஏதாவதொரு லிங்க்ஸ்கள் அல்லது ஃபைல்ஸ்கள் போலியாவையாக இருக்கலாம். அதாவது இவை சைபர் கிரிமினல்கள் உங்களுக்கு விரிக்கும் மோசடி வலையாக இருக்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஐசிஐசிஐ வங்கி குறிப்பிட்டுள்ளது. மோசடி செய்பவர்கள் யூசர்களுக்கு மெயில்/மெசேஜ் அனுப்பி, ஃபைல்ஸ்களை டவுன்லோட் செய்ய சொல்வார்கள் அல்லது பிரச்சனையை ஏற்படுத்தும் வெப்சைட் URL லிங்கை கிளிக் செய்ய சொல்வார்கள். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

“ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட மொபைல் எண்ணை அழைக்க சொல்லியோ அல்லது ஏதேனும் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவோ சொல்லி எந்த எஸ்எம்எஸ்/வாட்ஸ்அப் மெஸேஜையும் அனுப்புவதில்லை. எனவே வங்கியிலிருந்து அனுப்பப்படுவது போல ஏதேனும் மெசேஜ் வந்தால் பலமுறை சரிபார்த்து பின் செயல்பட வேண்டும்” என வங்கி தனது யூசர்களுக்கு அலெர்ட் மெசேஜ் ஒன்றை சமீபத்தில் அனுப்பி இருக்கிறது.

தீங்கிழைக்கும் APK லிங்க் வங்கி பயனர்களுக்கு அனுப்பப்படும் புதிய வகை மோசடி அதிகரித்து வருகிறது. அனுப்பப்படும் APK லிங்க்-ஐ டவுன்லோட் செய்ய மோசடி நோபிள் அனுப்பும் மெசேஜ் வலியுறுத்துகிறது. ஒருவேளை தன்னை இன்ஸ்டால் செய்து ரெஜிஸ்டர் செய்தால் OTP-க்கள் உட்பட குறிப்பிட்ட நபரின் தொலைபேசியில் பெறப்பட்ட அனைத்து மெசேஜ்களையும் குறிப்பிட்ட APK, அதனை அனுப்பிய மோசடி நார்களுக்கு அனுப்பத் தொடங்கும் என்றும் ஐசிஐசிஐ வங்கி எச்சரித்துள்ளது. எனவே விழிப்புடன் இருங்கள் மற்றும் நம்பத்தகாத ஆதாரங்களில் இருந்து உங்கள் மொபைலுக்கு வரும் சந்தேகத்திற்கிடமான/தீங்கிழைக்கும் ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் வங்கி கூறியிருக்கிறது. ஒருவேளை இது போன்ற மோசடி மெசேஜ்கள் வந்தால் அதுபற்றி உடனடியாக தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் புகாரளிக்குமாறு கேட்டு கொண்டுள்ள வங்கி, மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும் சில பாதுகாப்பு டிப்ஸ்களையும் பகிர்ந்து கொண்டுள்ளது.

சைபர் கிரிமினல்களின் மோசடிக்கு எதிராக பாதுகாப்பாக இருப்பது எப்படி?

-உங்கள் மொபைலுக்கான லேட்டஸ்ட் அப்டேட் இருந்தால் அதை அப்டேட் செய்வதோடு லேட்டஸ்ட் செக்யூரிட்டி பேட்ச்சஸ்களை இன்ஸ்டால் செய்யவும்.

கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டார் போன்ற நம்பகமான ஆதரங்களில் இருந்து மட்டுமே உங்களுக்கு தேவையான ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

நம்பகமான நிறுவனங்களின் ஆன்டி-வைரஸ் சாஃப்ட்வேர்-ஐ இன்ஸ்டால் செய்வதோடு அதை அப்டேட்டாக வைத்திருங்கள்.

UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

எந்தவொரு அப்ளிகேஷனிற்கும் அக்சஸை அனுமதிக்கும் முன், பெர்மிஷன்களுக்கு கவனம் செலுத்துங்கள்.

இ-மெயில்ஸ்கள் அல்லது எஸ்எம்எஸ் மூலம் நீங்கள் பெறும் சந்தேகத்திற்கிடமான லிங்க்ஸ்களை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம்.

OTP, PIN அல்லது கார்ட் விவரங்கள் போன்ற ரகசியத் தகவல்களை யாருடனும், குறிப்பாக தொலைபேசி அல்லது ஆன்லைன் மூலம் ஷேர் செய்ய வேண்டாம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!