நான்.ரெம்ப..ரொம்ப பிஸிங்க 

நான்.ரெம்ப..ரொம்ப பிஸிங்க 

(படித்து விடுங்கள்..!

ஏதோ ஒரு புள்ளி உங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றலாம்)

நான்..ரெம்ப..பிஸிங்க…
இன்று எல்லோரிடத்திலும்
வெளிப்படும் Instant வார்த்தைகள்…

ஆரோக்கியமான செயல்பாடுகளில் பிஸி…
பாராட்டுக்களை பெற்றுத்தரும்…

தவறான
செயல்பாடுகளில் பிஸி…
அவமானங்களையே பெற்று தரும்…

Swiggy, Zomato என்னும் உணவு டெலிவரி செய்யும் பைக்குகள் எல்லா நேரங்களிலும் சுற்றுகின்றன.

Fast food இல்லாமல் இளைஞர்களின் மாலைப்பொழுதுகள் கழிவதே இல்லை…
Cancer வருவதற்கான அத்தனை மூலக்கூறுகளும்
(chemicals)
Fast food ல் நீக்கமற நிறைந்து
இருக்கின்றன.

கையடக்க செல்போன்கள் phornography
(ஆபாச வீடியோக்கள்) படங்களினால் ஆபாசத்தில் வழிகிறது.

அறிவை மழுங்கடிக்கும் வீடியோகேம் விளையாட்டு App கள்
ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக முளைக்கிறது.
இதில் காசு கட்டும் நவீன சூதாட்டங்கள்…

Whattsapp, Instagram, என personal சாட்டிங்குகள்…(Chats)
இதில் அந்தரங்க படங்களை பதிவேற்றி பரிமாறிக் கொள்ளுதல்..
செல்போனில் ஒரு வாழ்க்கையையே
நடத்தி விடும் அவலங்கள்…

பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளின் செல்போன்களை வாரம் ஒருமுறையாவது
வாங்கி பார்க்கவேண்டும்.

Message கள் அழிக்கப்பட்டு இருந்தாலும் பரவாயில்லை.
கொஞ்சாமாவது பயமும் மரியாதையும்
இருக்கும் .

இன்றைய அதி நவீன கலாச்சார மாற்றங்கள் இளைஞர்களின்
பெண்களின் மன நிலைகளையும்
உடல் நிலைகளையும்
ஆரோக்கியத்தையும்
சூறையாடி விடுகிறது.

பெரும் தொகையில் பல…வகை.. வகையான…
பைக்குகள்..
அதில் அதிவேக ரேஸ்கள்..
ஒரு நொடி விளையாட்டு….
வாழ்க்கையை …
வலியாக்கிவிடும்..

குறி வைக்கப்படும் இளைஞர்களின் கைகளில் கஞ்சா பொட்டலங்கள்…
விளையாட்டுக்கு குடிப்பது..

என் பிள்ளை நல்லவன் என்ற நம்பிக்கை …
வீணாகிப்போகிறது.

விபரீதமான பிறகும்…
இழந்தபிறகும்….
மீட்பதற்கு ஏதும் மிச்சமிருக்க போவதில்லை..

இன்று வெட்கம் தொலைத்து வெளிப்படத்துவங்கி
இருக்கிற LGBTQIA போன்ற ஓரின கவர்ச்சிகள்,
ஓரினச் சேர்க்கைகள்,
ஆணும் ஆணும்,
பெண்ணும் பெண்ணும் ,
திருநங்கைகள்
திருநம்பிகள் என
வரம்பற்ற புணர்தல்கள் என கேடுகெட்ட நிலை
அதிகரித்து வருகிறது.

விழிப்புணர்வும்
கண்காணிப்பும்
புரிதல்களும் காலத்தின் கட்டாய தேவையாகி வருகிறது.

பெண்களின்..
தனிமையையும்…
வறுமையையும்..
பயன்படுத்தும்…
காமக்கொடூரன்கள்…

Tiktok, Reels, போன்ற
செயலிகள் மூலம் நடைபெறுகிற கூத்துக்கள்..

எதை எதையோ எடுத்து பகிர்வதும்
யார் யாரோடோ பாட்டு பாடுவதும்
ஆட்டம் போடுவதும்
அநாகரிகத்தின் உச்சங்கள்.

…இதன்…
பேரழிவுகளை ..
சூழலின்…
வெப்பத்தை…
யாரும் புரிந்து கொள்வதில்லை..
யாருக்கும் புரிவதுமில்லை..
புரிந்தவர்களுக்கும்
மாற்றும்..வழியும் தெரிவதில்லை…

ஒழுக்கங்கள் செல்லரிக்க துவங்கிஇருக்கும் சூழலில் சமூகம் இதற்கான களமாடலை துவங்க வேண்டும்.

Amazon,Flipkart பைக்குகள் பிதுங்கிய பைகளோடு எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.

ஆன்லைன் பர்ச்சேஸ் சில சமயங்களில் தேவையானதையும்
பல சமயங்களில் தேவையே இல்லாதையும் வாங்க வைக்கிறது.

Credit card பயன்பாடுகள் கடன்காரன் ஆக்குகிறது.
அப்பறம் தானே..
கட்டப்போகிறோம்
என்று கண்டதையும் வாங்கி விட்டு கட்டமுடியாமல் தவித்து …
வீடுகளில் வந்து தகராறு செய்து வசூல் செய்யும் நிலைகள்…

வட்டியின் சூழலில் மாட்டிக்கொண்டு
நிம்மதியை இழந்து..
கையில் இருப்பதையும் இழந்து ….
தடுமாறும் போது…
வாழ்க்கையின் இருப்பே..கேள்வி குறியாகிறது…

இதற்கெல்லாம் அடிப்படை காரணம்
நமக்கு என்ன தேவை?
என்ன தேவை இல்லை? என்ற அடிப்படை புரிதல்களே இல்லாமை…

நமக்கான வருமானங்கள் என்ன?
நமக்கான செலவுகள் என்ன?
கணக்கீடுகள் இல்லாமை…

அவன் செய்கிறான்…
இவன் செய்கிறான்..
நான் செய்தால் என்ன…வெட்டி
Ego-க்கள்..
அவைகள் சரிந்து விழும்போது உங்களை தாங்கி பிடிக்க கூட யாரும் வரமாட்டார்கள்…

எது தேவையான செலவு?
எது தேவையில்லாத செலவு?
பிரித்து அறிய தெரியவேண்டும்…!

தேவையான செலவுகள்…
அவசர செலவுகள்…
அடமானங்கள் தான் தீர்வா…?

நகை அடமானங்கள் வட்டி கட்டவும் முடியாமல் மீட்கவும் முடியாமல் தடுமாறும் போது…
சிக்கனங்களின்…
அருமை புரியும்..

அவசர தேவையான மருத்துவத்திற்கு
அரசாங்க‌ காப்பீட்டு திட்டங்கள் கைகொடுக்கும்.
சரியான
வழிகாட்டுபவர்களை
எப்போதும் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். சரியான வழிகாட்டல்கள்
மருத்துவ செலவில் பாதியை குறைத்துவிடும்…

சேமிப்புகள்…
எப்போதும்…
சுகமானவை…
உங்கள் வருமானம் அதிகமோ குறைவோ..
மாதம் குறிப்பிட்ட தொகையை நமக்கானது இல்லை என்று சேமிக்க பழகுங்கள்…

நமது வருமானத்திற்கு தகுந்த செலவுகள்…
திருமணமா?
குடும்பத்தின் நிகழ்ச்சிகளா?
இருப்பதை கொண்டே முடித்துவிட முயலுங்கள்…
வீண் செலவுகள் நிம்மதியை பறித்து விடும்….

உங்களை பாராட்டும்போது
போது…
சுற்றி இருப்பவர்கள்,

உங்கள் அவமானங்களின்போதும்…
வலியின் போதும்…
விலகிப் போய் விடுவார்கள்…

உங்கள் வாழ்க்கை…
உங்களுடையது…
அதில் மகிழ்ச்சியை
நிரப்புவது.. உங்கள்
கைகளிலேயே… இருக்கிறது…

கப்ளிசேட்!

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!