உண்ண நேரத்திற்கு உணவில்லை…
ஆனால் தினம் ஒரு அமைச்சருடன் சந்திப்பு..
உறங்க இடமில்லை..
உழைப்புகேற்ற ஊதியம் இல்லை..
உழைப்புகேற்ற ஓய்வில்லை..
வாழ்க்கையில் நிம்மதியில்லை..
எங்களுக்காக பேச ஆளுமை இருந்தும், இயலவில்லை..
எதிர்த்து கேட்க துணிவும் இருந்தும்.. கேட்க முடியவில்லை..
ஆதரவாக அரவணைக்க அருகில் உறவுகள் இருந்தும்.. காண இயலவில்லை..
பண்டிகைகள் அனைத்தும் வரும்.. ஆனால் எங்களுக்கு பாதி பண்டிகை சாலைகளில்..
வாழ்வும் இல்லை சாவும் இல்லை.. முழுவதும் போராட்டமே..
எண்ணிலடங்கா பிரச்சனையுடன் அரசு சபைக்கு சென்று தீராவிட்டாலும்.. எவ்வித சலனமும் எதிர்ப்பும் இன்றி செய்தி வர வேண்டும்….
பத்திரிக்கையாளனுக்கு காவல்துறை பணியும் இனிதாக தெரியும், காரணம் அது அரசாங்க பணி.. கிடைக்கும் சில அரசாங்க சலுகைகள்…
மொத்தத்தில் ஆயிரம் கணவுகளோடு கால்பதித்த பத்திரிக்கையாளர் துறை ஏனோ நிஜமாக மறுக்கிறது..
ஜனநாயகத்தின் நான்காம் தூணை நம்பி சென்னை இறங்கியவனுக்கு..வாழ்கை எனும் தூண் திண்டாட்டம்தான்..
தலைநகரில் கனவோடு வந்து இறங்கியவனுக்கு குழந்தையின் முகம் பார்க்க மூன்று வருடங்கள் ஆனது..
சாதிக்க வந்தவனுக்கு சம்பளம் போதவில்லை, கேட்டால் வேறு வேலை பார் என்ற இலவச அறிவுரை..
அதையும் தாண்டி சம்பாதிக்க எத்தனித்தால.. ஒழுக்கச்சீலனா என்ற ஏளன பட்டம் ..
சமூகத்துக்காக ஓடி உழைக்கும் என்னை ஏளனமாக பார்க்கும் சமுதாயமே…
ஒரு நாள் பத்திரிக்கையாளனாக இவ்வுலகத்தில் பயணித்து பார்க்க எத்தணித்து பார்…
நள்ளிரவு 12 மணிக்கு நல்லதானாலும், துர்சம்பவமானாலும் கண்விழித்து கண்காணிப்பவன் பத்திரிக்கையாளன் தான்…
மக்கள் பிரச்சனையை கொண்டு செல்பவனும், அரச செய்தியை கொண்டு வருபவனும் பத்திரிக்கையாளன்தான்..
ஆக கொலைகளத்தில் செய்தி சேகரிக்கும் ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் ஒவ்வொரு தலைமுறையின் அடையாளம்….

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











இதெல்லாம் பத்திரிக்கையாளர்களுக்கு பொருந்தும் உங்களுக்கில்லை கீழை நியூஸ், ஏன்னா நீங்கதான் உங்களபத்தியே செய்தி போடுற ஆளுல.
நண்பரே எங்களுக்காக என்று போடவில்லையே.. நீங்களும் உண்மை முகத்தை காட்டுங்கள்.. நீங்கள் செய்யும் செயல்பாடுகளையும் மக்களுக்கு செய்தியாக போடுவோம்.. உங்கள் முகத்தை மறைத்து செய்யும் விமர்சனமே எங்களுக்கு உற்சாகம்.. இன்னும் அதிகமாக குறை கூறுங்கள்.
நண்பரே கீழே உள்ள முகவரியில் இருந்துதான் முகத்தை மறைத்து குறை கூறுகிறீர்கள், நாங்களும் சென்னையில் தான் உள்ளோம், அவ்வளவு ஆத்திரமாக இருந்தால் நேராக எங்கள் அலுவலகத்துக்கே வந்து எங்களை திட்டி தீர்த்துக் கொள்ளலாம், அதனால் உங்களுக்கு சந்தோசம் கிடைக்கும் என்றால்..
106.203.27.106 சென்னை
106.203.55.76 திருச்சி
106.203.13.50 கடலூர்
106.203.43.59 காஞ்சிபுரம்
106.208.191.89
எங்களுக்கு பதில் அளித்திருப்பதை பார்த்தால் கீழை நியூஸ் நிர்வாகியாகத்தான் இருக்கவேண்டும் நல்லது, இருந்தாலும் ஒன்றை சொல்ல கடமைப்பட்டுள்ளோம். உங்களை குறை கூறவில்லை, ஆத்திரம் கொள்ளவுமில்லை, அதனால் எங்களுக்கு எந்த சந்தோஷமுமில்லை பொதுமக்களில் ஒருவராக அறிவுரை கூறுகிறோம். .உங்களது சொந்த ஊர் கீழக்கரை தற்சமயம் கீழக்கரையின் சுகாதாரமும் உள்கட்டமைப்பும் மிகவும் மோசமாக உள்ளது என்பதை நாம் அறிவோம் நீர் அறிந்தீரா என்பது புதிர், இதுபோன்று முக்கிய செய்திகளை பத்திரிக்கையின் மூலமாக அரசுக்கு குடைச்சல் கொடுத்து சாதிப்பதுதான் பத்திரிக்கையாளர்களின் வெற்றி (உ.ம். தினமலர் – எய்ம்ஸ்) அதைவிடுத்து எவண்டா புதுசா கடை தொரப்பான், வியாபாரம் பண்ணுவான், இயக்கம் ஆரம்பிப்பானு கூஜா தூக்குறீர் கீழை நியூஸ். நாங்கள் கூறியவை உண்மையா இல்லையான்னு முதலில் உம்மை சுயபரிசோதனை செய்து கொள்ளும்.
சகோதரரே சந்தோசம்..
நான் கீழைநியூஸ் நிர்வாகியாகத்தான் பதில் அளித்தேன்..உங்கள் அறிவுரையை நாம் ஏற்பதனால்தான் உங்கள் பதிவுகளையும் இங்கே போட்ட வண்ணம் உள்ளோம். நீங்கள் இன்னும் வெளிப்படையாக ஏன் இவர்களுக்கு மட்டும் கூஜா தூக்குகிறார்கள் என்று கூறினால், எங்களுக்கு விளக்கம் அளிக்க முடியும், அல்லது எங்களை மாற்றி கொள்ள முடியும்,
நிச்சயமாக நாங்களும் கோபம் கொள்ளவில்லை உங்கள் போன்றவர்களின் கருத்துக்களே எங்களின் சுயபரிசோதனைக்கான தூண்டுகோல்..