இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராக ராவ், சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ரா.ராஜா அறிவுரைபடி கொரானா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மண்டபம் பேரூராட்சி பகுதியில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
அதன்படி மண்டபம் பேரூராட்சி 18 வார்டுகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மாடசாமி சுந்தர்ராஜ், மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் கி.ஜனார்த்தனன், இளநிலை பொறியாளர் பாண்டீஸ்வரி இளநிலை உதவியாளர் சுப.முனியசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கை சுத்திரிப்பான், கையுறை, பிஸ்கட் பாக்கெட்களை , இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட செயலர் எம்.ராக்லாண்ட் மதுரம் வழங்கினார். சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் வசிக்கும் சாலை ஓரங்களில் வசிக்கும் 40 பேருக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது. உணவு விடுதிகள், காய்கறி கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளை உரிய நேரத்தில் மூடும் பணி பேரூராட்சி பணியாளர்களின் கண்காணிப்பில் நடைபெற்றது. இது தவிர வெளிநாடுகளில் இருந்து வந்தோர் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி பணியாளர்கள் கொரொனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாக்கும் மாவட்ட ஆட்சியரின் கொ. வீரராகவ ராவின் விழிப்புணர்வு ஆடியோவை ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களிடம் பிரசாரம் செய்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












