கடலூரில் மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம்..

கடலூரில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து, பாமக சார்பில் டாக்டர் அன்புமணி அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் 27/10/18 அன்று நடைபெற்றது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர்,குறிஞ்சிப்பாடி, குமராட்சி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், புவனகிரி ஆகிய 6 ஒன்றியங்களில் உள்ள 53 கிராமங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கடுமையாக பாதிக்கப்படும் என எடுத்துரைத்ததோடு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்ககோரி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் டாக்டர் அன்புமணி பொதுமக்களுக்கு வழங்கினார்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!