இன்று டிசம்பர் 10 மனித உரிமைகள் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சாரபாக விழிப்புணர்வு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மக்கள் நல பாதுகாப்பு கழகம் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய தினம் உலகில் மனித நேயம் தழைத்தோங்கவும், மனித நேயம் காக்கப்படவும், மனித குலத்தின் மாண்புகள் உயரவும், மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உயர்ந்த சிந்தனை அனைவரின் மனதிலும் ஆழமாக பதியவும்,போலித்தனமான மனித உறவுகள் மறையவும் இந்த நாளில் சபதம் ஏற்போம்” என H.முஹம்மது இஸ்மாயில், மக்கள் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

You must be logged in to post a comment.