பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சார்ந்த ராஜேஸ் என்பவர், தலஸ்லீமா எனும் ரத்த பற்றாகுறை நோயின் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்தவமனையில் சேர்ந்துள்ளார். ஆனால் அவருடைய தந்தை பல நபர்களிடம் முயற்சி செய்தும் அவருக்இகு தேவையான ரத்த வகை கிடைக்கவில்லை.
இந்நிலையில் ராஜேசின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்து வருவதை கண்டு அம்மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவர் அப்பகுதியில் உள்ள மாவட்ட ரத்த தான அமைப்பைச் சார்ந்த ஹுசைன் என்பவரிடம் தெரிவித்துள்ளார், உடனே அந்நபரும் அதே வகை ரத்தம் உடைய தன் நணபர் ஜாவத் என்பவரிடம் விபரத்தை கூறி மருத்துவமனைக்கு வரவழைத்துள்ளார்.
ஆனால் மருத்துவர்களோ ஜாவித் நோன்பு நோற்பதால் இரத்தம் எடுக்க முடியாது என மறுத்துவிட்டனர், ஜாவித் மருத்துவரகளிடம் எவ்வளவோ விளக்கம் கூறியும் கேட்கவில்லை, உடனே ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக நோன்பை துறந்து விட்டு, இரத்த தானம் அளித்து உயிருக்கு போராடிய அந்நபரை காப்பாற்றியுள்ளார்.
இது பற்றி ஜாவத் கூறுகையில், “எங்களுடைய மார்க்கம் மனித நேயத்தை போதிக்க கூடிய மார்க்கம், என் கண் முன்னால் உயிருக்கு ஆபத்து உண்டாவதை சகித்து கொள்ள முடியாது, ஆகையால் இவ்வாறு செய்தேன்” என கூறி அனைவரையும, நெகிழ வைத்தார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









