இப்படியும் நல்லுள்ளங்கள்… தேவையுடையோரை கண்டறிந்து உதவும் பெண் காவல் ஆய்வாளர்..

பார்வையற்றோர் மாற்றுத்திறனாளி ஆதரவற்றோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துப் பொருட்களை வழங்கி கவனித்து வரும் மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சுப்ரமணியபுரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கலைவாணிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்ளனர்.

அப்பெண் காவல் ஆய்வாளர் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு பகல் பாராது செய்து வருகிறார். பார்வையற்றோர்களுக்கு மட்டுமல்லாமல்  மாற்றுத்திறனாளிகள்,  மிகவும் ஏழ்மையான அப்பகுதியில் வாழும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வேண்டிய உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் இவரது காவல் எல்லைக்குட்பட்ட இவர் தினசரி ஒவ்வொரு பகுதியாக தேர்ந்தெடுத்து மிகவும் எளிமையான வாழும் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகிறார். காவல் ஆய்வாளரின் உதவிகளைக் செய்துவருவதை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள். மேலும் இதுபற்றி அவர் கூறுகையில் இந்த உதவிக்காக எந்த நேரமும் என்னை அழைக்கலாம் எனவும் என்றார் உற்சாகத்துடன்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!