உதவி ஆய்வாளரின் மனித நேயம் – பாராட்டிய பொதுமக்கள்..

மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் தனது மாமியார் உசிலம்பட்டி அருகேயுள்ள ஏழுமலை கிராமத்தில் உடல்நலக்குறைவால் இறந்துவிடுட்டார். எனவே அங்கு நடைபெறும் ஈமக்காரியங்களில் கலந்த கொள்ள தனது மனைவி ஜோதி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் அனுமதி கேட்டு தெற்குவாசல் காவல் நிலையம் வந்த நிலையில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மாவட்ட ஆட்சியர் தான் அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பின்னர் வந்தவர்கள் நீங்களே அனுமதிவாங்கிதாருங்கள் எங்களுக்கு விபரம் தெரியாது என்று கூறிய நிலையில் உதவி ஆய்வாளர் ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்பு  கொண்டு ஆட்சியர் அலுவலகத்தின் அனுமதியுடன் அவசரம் என்ற அடிப்படையில் காவல்நிலையத்திலேயே அனுமதி கடிதம் தயார் செய்யப்பட்டு உதவி ஆய்வாளர் தனது சொந்த காரிலேயே  அனுப்ப ஏற்பாடு செய்து தம்பதியருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளார். . உதவி ஆய்வாளரின் மனித நேயம் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!